ஏழு ஸ்வரங்களில்
தொடங்கும் இசைதனில்
இன்பம் பெருகிடும்
கேட்கும் இதயத்தில்
நொடிக்கு நொடி
மாறும் மனதை
நிலைப் பொழுதில்
நிலைக்க செய்யும்
இசையை கேட்கையிலே
இன்பம் கோடி வரும்
இரசவாதம் செய்யும் கலை
இசையாலே செய்யும் வினை
இசையாலே தீபம் ஏற்றிய
தான்சேன் வழிவந்த கலை
சர் கணேஷ்