இணையில்லா தனிப்பறவையானேன்!
இதயத்தை இரும்பாக்கிக்கொண்டேன்!
இருளில் வீசப்படுவேனா!என்னில்
எஞ்சிய பொருளுக்காக விலை பேசப்பட்டு
பிரேத பரிசோதனை செய்யப்படுவேனா!
இதோ இந்தவீட்டு இளையவள்
என்னை எடுத்துச் சுத்தம் செய்கிறாளே!
விரயத்திலிருத்து உபயோகமான பொருளாக
என்னை மாற்றப்போகிறாளாமே!ஆஹா!
என்னில் மண்ணும்உரமும் இட்டு
நிரப்புகிறாளே! இதோ என் இருப்பு
உறுதியாகிவிட்டது..அளவில்லா
ஆனந்தம் அடைந்தேன்! இதோ செல்கள்
அனைத்தும் பூக்கள் பூத்து குலுங்குகிறேன்!
என்னை அழகாக்கிய தேவதைக்கு நன்றி!.
மு.லதா
படம் பார்த்து கவி: இணையில்லா
previous post