இதய கனி 🍓
காதல் வடிவ கனியின்
நறுமணம் வீசும் இடமெங்கும்
என்னவனின் வாசனை…
காதல் வண்ண கனியின்
நறுசுவை புசித்து சிவந்திருக்கும்
என்னவனின் இதழ்கள்…
சிறு சிறு ஊடல்கள் இனிப்பாய்…
சிறு சிறு சண்டைகள் புளிப்பாய்…
ஓராயிரம் புன்னகைகள் காதல் தித்திப்பாய்…
காதலின் சுவையோடு
இதயத்தில் மயங்கி கிறங்கியிருக்கும்
என் இதய கனி அவன்
ஸ்ட்ராபெர்ரி காதலன்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)