இந்த நீரோடை
தாயால் நான்
பெருவிருட்சமாக வளர்ந்திருந்தேன்….
உன் பண ஆசைக்காக
என்னை வெட்டிச் சாய்த்தாலும்…
துளிர் விட்டு வளர்வது
என் வேர்களின்
நம்பிக்கை!
இடியால் நான் கருகினாலும் …
கருவறைக்குள் ஒரு விருட்சத்தை சுமப்பேன்…
அது என் தாய்மையின்
அடையாளம்….
அற்ப மானிட பிறவியே….
வெட்ட வெட்ட மீண்டும்
வளர்வாய்
மீண்டும் மீண்டும் வெட்டலாம் என
கர்வம் கொள்ளாதே….
நாங்கள் மீண்டும்
போராடி வளர்வது…
எங்கள் உயிரைக் காக்க
மட்டுமல்ல…
பறவைகளின் இருப்பிடமாகவும்,
இந்த உலகை காக்கவும்
நாம் மீண்டும்
வளர்வோம்….
— இரா. மகேந்திரன்–
படம் பார்த்து கவி: இந்த நீரோடை
previous post