தலைப்பு : இன்னொரு தாய்
மஞ்சத்தில் கட்டி அணைத்து உறங்க!
மனதில் இருப்பதை உரைத்திட!
என் கோபத்தை பலமுறைத் தாங்கிய!
முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழ!
என்னை தாயாக உணரவைத்த!
என் மகவு பிறந்த பின்னும்,
என் முதல் அணைப்புக்கு உரிய,
அகவை வித்தியாசம் இன்றி எல்லோர்க்கும்
பிடித்த இக்கரடி பொம்மையே? இன்னொரு தாய்…
அதனால் தானோ?
இன்று தனிமையில்
மங்கிய ஒளியில்
ஒற்றை இருக்கையில்,
யாருமற்றத் தனிமையில்….
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)