படம் பார்த்து கவி: இரவும் பகலும்

by admin 1
49 views

இரவும் பகலும்
சந்திக்கும்
இனிய அந்திப்பொழுது

நிலவு அழகா ?
நீ அழகா?
மனத்தில் பட்டிமன்றம்

தீர்ப்பு உனக்கே
சாதகம்
சொல்ல வேண்டுமா?

அதனால்
வா அன்பே
ஆடலாம் என்றேன்

அழைத்த கணத்தில்
என்னருகே
வந்தாய்

ஆனந்த நடனம்
ஆடினோமே நாமே
அகிலம் மறந்து

இந்துமதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!