இருளேற்றும் இரவுகளுக்கு உன் நிறம்
மாறி மாறி கனவு கொள்ளும்
பிரபஞ்ச ரகசியமொன்றை இமைமூட தருகிறாய்
உன் சுவாசம் இழுத்து உயிர்க்கும்
அந்த மேகச்சிதறல்களின் மென்சுமை உடைய
பேரன்பு கொள்ளும் கருணையற்ற நினைவுகளால்
விழி திறக்காமல் கிடக்கும் என் வானத்தில்
விண்மீன் கற்றைகள் நம் வீதியெங்கும் விழுந்தோடுகிறது
உயிரோடு உயிர் தழும்ப அணைத்துக்கொள்ளும்
உன் நினைவின் பிம்பம் தான்
இந்த பெருவெளியின் அத்தனை சாயலாய் பரவியிருக்கிறது ….
🌺 நிழலி