உனை பார்த்ததும் எனக்குள் கோடி பூ பூத்தது உனக்கேனடி எதுவும் தோன்றவில்லை என கேட்பது நாகரீகமாகாது. காதல் எதையும் மாற்றுமாம் ஏனோ கடைசிவரை உனை மாற்ற எனக்கு தெரியவில்லை. உனக்குள் தான் எதுவும் பூக்கவில்லை ஆனால் நீ தூக்கியெறிந்த காலணியில் இட்டு வைத்த விதைகள் எல்லாம் செடிகளாகி புன்னகையோடு பூத்து குலுங்குகின்றன காதலோடு! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: உனை
previous post