- உன்னில் என்னை *
அனாதையான பல
அன்னையின்
பிள்ளை உன் அன்னையடா,;!
இயற்கை அன்னையின்
மடியில் பூத்த உத்தம
பிள்ளையின் புத்திரன் நீயடா,;!
எத்தனை உயரத்தில்
நீ இருந்தாளும்
மன்னில் வாழும்
உயிர்களுக்கு
உணவிலும் உடலிலும்
உச்சி முதல் பாதம் வரை
கரங்கள் இல்லாவிடினும்
உன் உயிரை
தந்து உதவும்
கருணை கண்
கொண்டவன் நீயடா..,!
சீமச்சடங்கானாலும்
ஈமச்சடங்கானாலும்
உனையன்றி
வேறாரும் முதலில் இல்லை,;!
பசுமை இலையின் மேல்
பல் சிதறி படுத்துறங்கும்
உன்னில் என்னை ஊற்றி
உன் துணையோ தோழியோ
உன் வெள்ளை மலரை
வெட்கபட வைத்தது யாரடா…,!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)