உன் மீது
சறுக்கி விழுந்த
ஒவ்வொரு துளியும்
உன்னைச்
சருகாக்காமல்
காக்க வந்தவையென
அறியாயோ…?
நீ வடித்துவிட்ட
நீர்த்துளிகள்
துடித்துக்கொண்டே
சிதறுவதை
உணராயோ…?
உண்மைதனை
உணராத – சில
பெண்மை தனக்கு
நீ ஒப்பானாய்
இளந்தளிரே…!
*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை
படம் பார்த்து கவி: உன் மீது
previous post