உலகின் அற்ப மானிட பிறவியே….
பூமியை துளையிட்டு
யுரேனியம் எடுத்தாய்….
உன்னை அழிக்க நீயே
ஆயுதம் செய்தாய்…
இயற்கையை அழித்து
விலங்குகளை விரட்டினாய்….
நீர் ஓடி சேரும் குளங்கள் மேல் கட்டிடங்களை எழுப்பினாய்…
இரசாயண வாயுக்களை
காற்றில் கலந்தாய்…
காற்றில் கூட கதிர் வீச்சுகளை நுளைத்தாய்….
இந்த பிரபஞ்ச சீற்றத்தின் கர்ஜனை
உன் அலறலின் ஆரம்பம்….
— இரா. மகேந்திரன் —
படம் பார்த்து கவி: உலகின்
previous post