என் தேவதை
நிலவின் துளி ஒன்று
உலவுகிறது என் மகளாய்!
கண்ணே என் கண்மணியே
விண்ணோரும் வியக்கும் அழகே!
உன்னில் ஓடுதம்மா
எந்தன் உயிர்மூச்சு!
உயர்கல்வி நீ கற்க
துயர் தந்து பிரிந்தாயடி!
பொங்கும் என் மனமெல்லாம் நீ
தங்கும் விடுதியில்தான் மகளே!
எங்கும் உன் உருவமடி கண்ணே
மங்கும் என் விழிகள் முழுவதும்
பொங்கும் கண்ணீர்த் துளிகளால்.
பிரிவென்ற ஓர் சொல்லை
பெரிதும் வெறுக்கிறேனடி என்
அரிதான பொக்கிஷமே!
எந்நாளும் உன் நினைவில்,
என்மனமோ கானகமானதடி!
பொந்நாளும் விரைவில் வாராதோ,
என்னுயிர் தேவதையைத் திரும்ப
என்னிடம் தாராதோ!
உன் வரவை எதிர் நோக்கி,
வழிமீது விழிவைத்து
உறங்காமல் காத்திருக்கிறேன்.
படிப்பை முடித்துவிட்டு,
துடிப்பாக நீயும் விரைந்தோடிவாராய்
என் கண்ணான கண்மணியே!
மு.லதா
படம் பார்த்து கவி: என் தேவதை
previous post