கவிக்குழந்தை
காகிதத் தாய்
பெற்ற வண்ணக்
கவிதைக் குழந்தை
மை தீட்டிய
பேனா நுனியில்…….
அன்பை பொழியும்
ஆசை வார்த்தைகள்
இதயம் நிறையும்
ஈரமான நிகழ்வுகள்
உள்ளத்தின் குமுறல்
எண்ணங்களின் பிரதிபலிப்பு
கொஞ்சும் காதல்
உணர்ச்சி உளறல்கள்
சிந்தையை தூண்டும்
சிந்தனை சிதறல்கள்
என
சிரிக்கும் மழலையாய்
ததும்பி தவழும்
கவிக்குழந்தையே……😇
என் கவிதைக்குழந்தையே……😇
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)