தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்
அமைதியான இளங்காலைப் பொழுதில்,
மேகங்கள் தவழும்
மலைசூழ் ஆரண்ய மதில்,
ஊசியிலைக்காடுகள் சூழ்ந்த
தெளிந்த நீரோடையில்,
தனிமையில் ஓர் ஓடம்!
ஆம்,
என்னைப்போல்
யார் வரவைத் தேடி?
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)