தாலாட்டும் காற்று
சன்னல் ஓரம் வீசும்
தொடர்வண்டி பயணம்
தொலை தூரம் செல்லும்
இணையாத தண்டவாளங்களை
இணைக்கும் புகைவண்டி
சொந்தம் விட்டு சிலபேரை
தூக்கி செல்லும் புகைவண்டி
பிரிந்த சொந்தம் இணைய
தாங்கி வரும் புகைவண்டி
ஜாதி மதம் பேதம் இல்லை
உயர்வு தாழ்வு மாற்றம் இல்லை
அத்தனை மொழியினரையும் தாங்கி
பாரதம் சுற்றும் புகைவண்டி..
சிக்கு புக்கு சிக்கு புக்கு
என புகையை கக்கி..
தடக் தடக் தடக் தடக்
என தாளம் போட்டு..
குடுகுடு என ஓடும் புகைவண்டி..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)