படம் பார்த்து கவி: நம்மைப் பிரிக்கும்

by admin 1
28 views

நம்மைப் பிரிக்கும்
நனவுகளுக்கு நன்றி சொல்வோம்!
கனவுலகில் கதைப்போமா..!
கதிரவன் உதிக்கும் நேரம் சிவக்கும் வானமாய் உன்
இதழ் வண்ணம்!
அதரங்களின் சிவப்பை எதிரொலிக்கும் கன்னம் !
வில்லாய் வளைந்த
புருவங்களோ நாணேற்றாது நாணக்குடை பிடித்ததோ !
விழி திறவாது விரல் நீட்டி அழைக்காது
மௌனமாய்க் கொல்லும் பதுமை நீ ! பரவாயில்லையடி ..
மாறாத பருவமில்லை..
கடக்காத பருவமுமில்லை..
மாறாத உன்
மாமனுமில்லை!!
என்ன செய்ய..
வயதுகள் கடந்தாலும்
யாருக்கும் வாய்க்காத
கிழவி நீ..இந்தக்
கிழவனுக்கெனவே..!
தலை கோதிய
விரல்களை விடுவித்து விருட்டென்று கிளம்பினாள் _ இந்த வருங்கால கிழவி
விடியலில் சந்திக்க..!!

✍🏼 தீபா புருஷோத்தமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!