- நீல தேவதை *
காரிருள் மன்னா
கருமை நிற கண்ணா ;
நர்த்தன தாண்டவம் ஆட
நீல கடலே உன் நடன
மேடையாக மாற;
அலைகள் சீற்றத்தில்
அலைமோத கரையில்
இருக்கும் கற்களோ
கவிபாடும்….
விண்னோடு ஆரத்தழுவி
கண்ணுக்கு வருந்தளிக்கும்
அலை கடலே ,,,!
இயற்கை சீற்றத்தில்
இன்றியமையாததும்
என்றும் மாறாததும்
மறையாததும் ;,,
கடலும் கடலலையும்,,;
இணை பிணைந்த
பந்தமாய் வானும்
வான்மேகங்களும்
சமுத்திரத்தின் சொந்தங்களாகவே
வாழ்கின்றன ….
உனக்குள் வாழும்
உயிர்களுக்கு
கடலன்னையாய் காலம்
முழுதும் உயிர்களை சுமந்து
வாழும் பிரசவம்
அறியா கார்பிணி தாயே….!!!
மீனவர்களின்
குல தெய்வமான உனை
ரசிக்காதவரும் இல்லை ….!!!
உன் அன்பில்
நனையாதவரும் இல்லை …!!!
உன் கோபத்திலிருந்து
மீண்டவரும் இல்லை …!!!
உனை நம்பி வீழ்ந்தவரும்
இல்லை …!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.