நெஞ்ச இணைப்பு காதலிது
அவள் உணர்ச்சி மயமானவள்
ஆன்மாவின் வழியே காண்பவள்
அவன் இதயம் அவள் இதயத்தை மூடி வைக்கும் உறை
அவன் உள்ளம் அவள் அழகின் உறைவிடம்
அவன் மார்பகம் அவள் துயரங்களின் ஊஞ்சல்
துயருற்ற நெஞ்சமும் உள்ளமும்
மகிழ்ச்சியினால் புகழினால் பிரிந்து விடுவதில்லை
கண்ணீரால் கழுவப் பெற்ற காதல்
காலமெல்லாம் அழகும் தூய்மையும் கொண்டு நிலவும்.
க.ரவீந்திரன்.