பட்டமரம்
மண்ணுக்குள் வேர்ப்
பரப்பி விருட்சமாக
வளர்ந்து ஜீவன்களுக்கு
மகத்தான உதவி
செய்து பசுமை
தந்து பழுத்து
காய்ந்த சருகாக
உதிர்ந்த மரம்
முதுமையானலும் முடிந்த
உதவிகள் செய்து…..
தனிமையைத் தாங்கும்
ஆசானாக உயர்ந்து
நிற்கும் உன்னில்
இசை மீட்டி
காவியம் படைக்கும்
காதல் நினைவுகளை
விதையோடு விதைத்தனரோ?
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)