என்னவளே ஏந்திழையே!
தடைபட்ட தண்ணீராய்
குவலைக்குள் அணைபட்டு கிடந்தேன்
ஆலையிட்ட காப்பியாய்
அரைபட்டு கிடந்தவனை
சிரம் தாழ்த்தி
கரம் பற்றி கொண்டவளே!
அடி முதல் முடி வரை
என்னை ஆட்படுத்தி கொண்டவளே!
இதலோடு இதல் பதித்து
இடை நிறுத்தி கொண்டவளே!
தடை உடைத்த வெள்ளமாய்
உன்னை தழுவி அணைத்து கொள்ளவா!
நீறூற்றாய் நானும் மாறி
உன்னை பாலூற்றாய் செய்யவா?
படம் பார்த்து கவி: பால் ஊற்று நீயடி!
previous post