- பெண் தோழன் *
எத்தனை கோவக்காரன் நீ
பெண்களின் தமயனான
தக்காளியை இரண்டு
பிண்டங்களாய் வீழ்த்தி விட்டு தனக்கென்ன வென்று
மரப்பலகையில் பக்குவமாய்
படுத்துறங்குகிறாய்…
கடவுளின் கையில் காவல்
ஆயுதமாய் தெரிகிறாய்,!
அடுக்கலையில் பெண்களின்
தோழனாகிறாய்,!
உயிர் பலியின் போது
பாவங்களின் கைகளாகிறாய்,!
சில சந்தர்ப்பங்களில்
பெண்களின்
பாதுகாவலனாகிறாய்
மரப்பலகையில் பச்சை மொட்டு
காவலர்களின் பாதுகாப்பில்
படுத்துறங்கும் ஐயனாரின்
அடையாலமே உனை
வணங்குகிறேன்,!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)