முதலை கண்ணீர் மனிதர்கள்
கோபப்படுபவன் மனதில் உள்ளதை
அந்நேரத்திலேயே
கொட்டி விடுவான்
கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்
சுவையான சுளைகள் உள்ளதை போல்
கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்
சொல்லப்படாத ஓர் அன்பு நிறைந்திருக்கும்
சிரித்த புன்னகையிலும்
மறைத்த நஞ்சு நிறைந்திருக்கலாம்
ஏமாற்றி வேட்டையாடும்
தந்திரம் கொண்டது முதலை
ஒரு இரையை சேற்றில் புதைத்து வைத்து
அழுக வைத்து உண்ணும் பழக்கமும் அதற்குண்டு
இறந்தது போல நடித்து பாவப்படுவோரை வஞ்சிக்கும் குணமும் அதற்குண்டு
அது போல தான்
நம்மை சுற்றியும் நிறைய ஆபத்தான
முதலை மனிதர்கள் உண்டு
சிந்தும் புன்னகையில்
மங்கி விடாதே
போலியான கண்ணீரில்
பலியாகி விடாதே.
லி நௌஷாத் கான்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)