- மேக காதல் *
வாண் மேகங்களாகவே
அள்ளி அறவணைத்து கொள்ளும்
சலிக்காத என் உறவே ;
ஊடல் கொள்ளவே
சண்டையிடும் என் உயிரின்
காதலே;
அன்னை மடி ஆனந்த
தாலாட்டை உணர வைக்கும்
உயிரே!:
உன்னுள் நானும்
என்னுள் நீயுமாய்
வாழ்வதற்கு சாட்சியாக
சந்திரனும் சூரியனும்
வாழ்த்தி வழியனுப்ப
வான் மேகங்கள் அட்சதையை
நட்சத்திரங்களாக
அள்ளி சிந்த அற்புதமான
ஒற்றை வார்த்தையில்
சொல்லி விடலாம்
பேரண்டத்தின் ஆதாரமே
அன்புதான் என்று….!!!
புன்னகையின்றி பூங்காற்று
இன்றி மேக கூட்டத்தினுள்
புதையுண்டு உணர்வுகளை
வெளிப்படுத்த
ஆணாக நீயும்
பெண்ணாக நானும்
மேகத்தின் கைகளில்
விண்ணுலகமே
வியந்து பார்க்கும்
அற்புத படைப்புகள் நாங்கள் ….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.