யாரோ இவள் யாரோ
நட்சத்திர முகிலுக்குள் தங்க ஆடை யணிந்து
ஜொளிக்கிறாளே
இவள்தான் ராணியோ
இவள்
சதுரங்க எனும்
ஆட்டத்தில் ராஜாவை
காக்கவந்தவளோ
ஆட்டத்தை வெற்றி
பெற உந்துசக்தியாக
இருப்பவளோ
இவள் போல்
என் வாழ்க்கை
யெனும் சதுரங்க
ஆட்டத்தில்
என் ராணியை
கொடுக்காமல்
வெற்றி பெற
சொல்வது
சரியாகுமா
என் இறைவனே….
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)