வரண்டுபோன என் வாழ்வில்
வரமாக நீ வந்தாய் ஆருயிரே!
தொலைந்துபோன என் கனவுகளை
மீட்டெடுத்தாய் என்னுயிரே!
கற்பனையில் நான் காத்திருந்தேன்
கண்ணெதிரே நீ வந்தாய்!
சொப்பனமோ என்றெண்ணி
இருவிழிகள் மூடிடவே!
மூடிய விழிகளுக்குள்
ஓவியமாய் நீ வந்தாய்!
நம்குலம் வேறானாலும்
செம்புலப்புயல் நீர் போல
கலந்துவிட்டாய் என்னுயிரே!
கட்டுண்ட மீளாக்காதலில் நாம்!
ஐயஹோ!
வெட்டுண்டோம் ஆணவக்கொலையால்!
பாவிகளால் ஆவி பிரிந்தாலும் கூடியே
மேகத்தில் ஒளிந்துகொண்டு நம்
மோக மூச்செறிவோம் வா!
நம் காதல் கைப்பிடிக்குள் சிக்குண்ட
காற்றை விட்டுவிடாதே
கலைத்துவிடும் நம்மை!
கடல்நீர் முகர்ந்து கார்முகிலாய்
கரம் கோர்த்து உலா வருவோம் வா
ஆதவன் நம்மை ஆவியாக்கும் முன்பு
மழைநீராய் மீண்டும் மண்ணில்
கலப்போம் வா என்னுயிரே!..
மு. லதா