விடியும் பொழுதுகள் எல்லாம் உனக்காக தான் விடிகின்றன என்பது உனக்கு தெரியுமா? மிடறும் தேநீரின் வாசனை எல்லாம் உன் முத்தத்தை தான் நினைவு படுத்துகின்றன. வெள்ளை காகிதங்கள் எல்லாம் உனக்கான கவிதைகளை மட்டுமே எழுத சொல்கிறது. அந்த எழுதுகோல்களும் ஸ்ரீராமஜெயம் போல உன் பெயரை மட்டுமே எழுத சொல்கின்றன! உயிரற்ற என் தனியறையின் மேசை கூட என்னை போலவே உன் காதலை மட்டுமே சுமக்கின்றன! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: விடியும்
previous post