எனக்கு பிடித்த பாத்திரம் புதுமைப்பித்தனின் காலனும் கிழவியும் . மருதாயி கிழவி போருக்கு முதல்வனையும் ஊருக்கு முதல்வரையும் மகாராஜாவே நேரில் சென்று அழைத்து வரவேண்டும்.. என்ற சொல்வளமே எனக்கு கிழவியை பிடிக்க காரணம் பயமே இல்லாமல் யமன் தர்மராஜாவை ஓட விடுவாள்.
அந்த கயறு கொடு (பாசக் கயிற்றை) நல்ல இருக்கு அப்டினு சொல்லும் கிழவியை எனக்கு பிடிக்கும் யமனை பல வேலை வாங்குவாள் , அவன் எருமையைத் தொழுவில் கட்டிவிட்டு, பருத்தி விதையை அள்ளிவைத .
யமன் நான்தான் யமதர்மராஜன்!” என்று அவனது வாய் உளறி சொல்லும் அளவுக்கு வேலை வாங்குவாள் கிழவி யமனுக்கு அஞ்சமாட்டாள். (நாங்கள் தமிழர்கள் என்பதால், கேள்விகளைக் கேட்பதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்,) எனவே அவள் உடல், ஆன்மா, சிந்தனை.. மேலும் பல கேள்விகளைக் கேட்டாள் நாம் கவனமாகப் படித்தால், அவளுடைய கேள்விகள் வெப்ப இயக்கவியலின் முதல் விதிகள்ப் போலவே இருக்கும் உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்?
இந்த உடலைக் கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும்; உன்னாலே அழிக்க முடியுமா! அடியோட இல்லாம ஆக்க முடியுமா? எனக்கு பிடித்த மருதாயி கிழவி யமனை தன் கேள்விகளுடன் ஓட வைக்கிறாள்.
நாம் அவளைப் போல் தைரியமாக சு இருந்தால் நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியும் இந்த கதாபாத்திரத்தில் இருந்து கற்றுக்கொண்டேன். புதுமைப்பித்தன் அவர்களுக்கு நன்றி