எவ்வளவு வசீகரமான கண்கள் இருந்தும் புருவங்கள் சரியாக இல்லையென்றால் எடுப்பாக இருக்காது.
இதனால் புருவங்களைப் பராமரிப்பதும் அவசியம். இன்று பார்லர்களில் புருவங்களை வலி இல்லாமல் திருத்தம் செய்ய எத்தனையோ வழிகள் வந்துவிட்டன.
சிலருக்குப் புருவங்களில் அடர்த்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு விளக்கெண்ணெயும், துளசி இலைச்சாறும் சிறந்த தீர்வாக இருக்கும்.
இவை இரண்டையும் சிறிதளவு கலந்து எடுத்துக்கொண்டு புருவங்களில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்துவந்தால் புருவங்களின் அடர்த்தியும், கருமையும் கூடும்.