மாதவிடாயின் இரத்தக்கட்டிகளுக்கான இயற்கை வைத்தியங்கள்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சிவப்பு ராஸ்பெர்ரி டீ சேர்க்கவும். இதை பாத்திரத்தில் கொதி நிலைக்கு கொண்டு வந்ததும் இளங்கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி குளிர விடவும். பிறகு இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கவும்.
ஐஸ் பேக் கொண்டு குளிர்ந்த ஒத்தடம் செய்வது நல்லது. அடிவயிற்றில் குளிர்ந்த பேக் கொண்டு 2 நிமிடங்கள் வரை விட்டு விட்டு அகற்றவும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பிறகு மூன்று முறை இதை செய்யவும். அடிக்கடி செய்யலாம்.
வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பல்வேறு இரத்தப்போக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
இஞ்சையை மசித்து நீரை கொதிக்க வைத்து அதில் சேர்க்கவும். பாத்திரத்தில் கொதி நிலைக்கு வந்ததும் 5 நிமிடங்கள் விட்டு இறக்கவும். பிறகு வடிகட்டி தேநீராக்கி குடிக்கவும். தினமும் இரண்டு முறை குடிக்கவும். அதிக இரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாயின் போது உறைதல் ஆகியவற்றை குறைக்கும்
ஒரு கப் நீரை கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் கெமோமில் தேநீர் சேர்க்கவும். பிறகு அதை கொதிக்க வைத்து வடிகட்டி குளிரவிடவும். அதனுடன் சிறிது தேன் சேர்த்துவிடவும். தினமும் இந்த தேநீர் குடிக்கலாம்.
பூண்டை சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தினசரி பூண்டை உணவில் சேர்க்கலாம். இதற்கு மாற்றாக பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் இரத்தக்கட்டிகள் குறையும்.
பூசணி விதைகளில் பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா 3 பாலி அன்சாச்சுரேட்டர் கொழுப்பு அமிலங்கள் (புரோஸ்டாக்லாண்டின்களாக மாற்றப்படுகின்றன) இது மாதவிடாய் காலத்தில் இரத்தக்கட்டிகளை எளிதாக்க உதவும்.