விசில்!

by Nirmal
130 views

அன்று ஒரு புரபசர் ஒரு முக்கியமான பாடம் எடுக்க ஆரம்பிச்சாரு. போர்டு பக்கம் திரும்பி எழுத ஆரம்பிச்ச உடனே ஒரு கபோதி விசில் அடிச்சான்.

மாணவர்கள் பக்கம் திரும்பி யாருடா அதுன்னு கேட்டார். ஒரு பதிலும் இல்லை.

புரபசர் மார்க்கர் பென்னை மூடி வைத்து விட்டு, இத்தோடு க்ளாஸ் முடிஞ்சுது, நான் வேணா ஒரு கதை சொல்றேன்னாரு.

எல்லாரும் விருப்பமாக தலையாட்டினார்கள்.

அவர் கதை சொல்ல தொடங்கினாரு.

“நேத்து ராத்திரி தூக்கம் வர்ல, அப்போதைக்கு வர்ற மாதிரியும் தெரியல. சரி காருக்கு பெட்ரோல் நிரப்பிட்டு வருவோம்னு கிளம்பிப் போனேன்.

பெட்ரோல் நிரப்பிட்டு, டிராபிக் இல்லாத ரோட்ல கொஞ்சம் சுத்துனேன், ஒரு தெருமுனைல ஒரு அழகான பொண்ணு நின்னுச்சு, அவ நடை உடையைப் பார்த்தா ஏதோ பார்ட்டி முடிஞ்சு வர்ற மாதிரி தெரிஞ்சது.

ஒரு ஆர்வத்துல அவ பக்கத்துல காரை நிப்பாட்டி, லிப்ட் வேணுமான்னு கேட்டேன்.

ரொம்ப நன்றின்னு சொல்லி முன்சீட்ல உக்காந்துக் கிட்டாள்.

பேசிக் கொண்டே வந்தோம். அவளது அறிவும், எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் அதைப் பற்றிய அவளது புரிதலும் எனக்கு வியப்பை அளித்தது.

அவ வீடு வந்த உடனே எனது உதவும் குணம் அவளை

என் மீது காதல் கொள்ள வைத்ததாகக் கூறினாள்.

நானும் ஒத்துக்கிட்டேன் அவள் அறிவிலும் அழகிலும் மயங்கி விட்டதை, அப்புறம் சொன்னேன், நான் புரபசராக வேலை பார்க்கிறேன் என்பதை.

இரண்டு பேரும் மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.

ரிலேஷன்சிப் அப்பவே தொடங்கிருச்சு.

அவ இதே யுனிவர்சிட்டில படிக்கிற அவ தம்பியை பாத்துக்கச் சொன்னாள்.

சரி அவன் பேரு என்னன்னு கேட்டேன்.

நீங்களே அவனை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

எப்பப் பார்த்தாலும் விசில் அடிப்பான் என்று சொன்னாள் ” என்று கதையை முடித்த நிமிடத்தில்,

எல்லா பயபுள்ளகளும் க்ளாஸ்ல விசில் அடிச்ச பயனைப் பார்த்தானுவ.

அப்ப அந்த புரபசர் சொன்னாரு,” பி. எச்டி சைக்காலஜி காசு குடுத்து வாங்கினன்னு நினைச்சீங்களா, படிச்சு வாங்கினதுடா! “

You may also like

1 comment

Avatar
Asuvathi Senthil September 15, 2023 - 6:07 pm

A teacher is a teacher 👨‍🏫

Leave a Comment

error: Content is protected !!