வானில் மிதக்கும் வெளிச்சக் கப்பல்
வண்ணக் கீற்றால்
நெஞ்சைக் கொய்ய
வசந்த விழிகளில்
விழுகின்ற பிம்பம்
விரித்து மகிழும் கண்ணகலத்தை…
அகன்ற விழித்திரை
எல்லை முடிந்ததில்
தொலைவைத் தாண்டிய ஒளியும்
எள்ளெனக் கரைகிறது நொடியில்…
கடந்து போன கற்றையது
உதிர்ந்ததா உதிர்த்ததா என்றறியாது
ஐந்து நிமிடக் கண்ணின் விருந்தை
குற்றமறியாது ரசித்துப் புசித்து
குதூகலித்து திரும்புகிறது மனது…
ஒளி தூக்கிச் சென்ற
சிறு அனலானது
அணைத்தபடி உறங்கும்
அணில் கூட்டின்
அரைநுனியைத் தீண்டினும்
அகிலத்தின் அறம்
அடியோடு அறுபடுமன்றோ…
ஒளி விருந்து படைக்க
ஓராயிரம் விண்மீனும்
பால் வண்ண நிலவும் படர்ந்திருக்க
தற்காலிக சுகமீன்று செல்லும்
இவ்விளக்கு தேவையன்றோ…
ஒருதுளி பிழையானாலும்
ஒளிரும் அதன் துளிகள்
மீளாத இருளின் அடையாளமன்றோ!
புனிதா பார்த்திபன்