கூட்டைவிட்டுப் பிரிந்த
உயிரின் முடிவில்
பிறிதொரு சனனம்
மூடிய திரையின் பின்னே
அடுத்தொரு காட்சி அரங்கேற்றம்
தோல்வியின் முடிவில்
வெற்றிக்கான வேட்டை
அத்தமனத்தின் முடிவில்
விடியலின் எழுச்சி
ஒவ்வொரு முடிவிலும்
ஒரு இனிய ஆரம்பம்
பயணங்கள் முடிவதில்லை!
நாபா.மீரா