முத்த கருது வேணாம்
பால் கருது சோளம்
வேண்டுமென
அடம் பிடித்தேன்
எல்லாமும் பால் கருதா வாங்குன்னா
கட்டுபடியாகாது
அதனால
கருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்
அம்மா
அவள் அதட்டலுக்கு பயந்து தான் போனேன்
வாடி போன முகம் கண்டு
இறுதியாய்
ஒரு பால் கருதை
சோளம் விற்கும் அண்ணாச்சி
அன்பாய் கொடுத்து விட்டு சென்றார்
வருடங்கள் உருண்டோடியது
வறுமையும் போனது
விரும்புவதை வாங்கும் வருமானம் இருந்தும்
காலம் சக்கரை வியாதியை
தந்து விட்டு சென்றதால் என்னவோ
பால் கருது சோளத்தின்
பால்வாடி நினைவுகளை
நினைத்து பார்த்து மட்டுமே
நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது
காலம்
ஒன்றே ஒன்றை கற்று தந்து விட்டது
எல்லோருக்கும் எல்லாவற்றையும்
தராதென்று!
-லி.நௌஷாத் கான்-