எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
கலைந்த சட்டை, நிறமாறிய வேட்டியுடன் இரண்டு நாட்களாக தாத்தா
மணி வெளியில் தலைகாட்டவில்லை படுத்த நிலையிலே உணவு
அருந்தாமல் படுத்த நிலையில் பல்செட்டு கூட போட்டுக்கல.
மகன், மருமகனிடம் தூக்கு … தூக்கு என்று அனத்தியப்படி இருந்தார்
“நட உட விழுந்து போச்சு , தண்ணி சோறு இல்ல அவ்வளவுதான் “என்று மகன் அருகில் இருப்பவரிடம் கூற அனைவரும் மணியை பரிதாபத்துடன் பார்த்துச் சென்றனர்.
அவர்களிடமும் “தூக்கு…தூக்கு “ என்று கூற அவர்கள் செய்வதறியாது நிற்க மணிக்கு கோபம் தலைக்கேறியது பேரன் வசந்த் பள்ளி சீருடையுடன் தாத்தா அருகில் வந்து “தாத்தா உங்களிடம் ஊக்கு இருக்கா “ என்றபடி மணி சட்டையைப் பார்க்க என்ன“தாத்தா உங்களுக்கும் ஊக்கு வேண்டுமா “என்றான்.
“இருங்க அம்மாவிடம் வாங்கி வருகிறேன் “என்றவுடன் மணி முகத்தில்
மகிழ்ச்சி தாண்டவ மாடியது வசந்த்தும் ஊக்குடன் வந்து தாத்தா சட்டைக்கு மாட்டிவிட மகிழ்ச்சி பொங்க தாத்தா எழுந்து நின்றார்
மற்றொரு ஊக்கு வாங்கி இருப்பில் இருக்கும் வேட்டிக்கு குத்திக் கொண்டு கம்பீரமாக நடந்தார்பல்செட்டை தேடி வாயில் மாட்டி விவரம் கூறி நடந்து வெளியே வந்தார் சுற்றத்தாரும் மகனும் மகளுக்கும்
விவரம் புரிய வெட்கி நின்றனர்.
முற்றும்.