எழுத்தாளர்: ஜனனி நவீன்

by admin
171 views

உங்கள் பெயர்: 

ஜனனி நவீன்

உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்:

சாரல் நாவல்ஸ், அமேசான் 

1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன? 

எழுத்து நடை.  ஒரு சாதாரண விஷயத்தை கூட எழுதும் விதத்தில் எழுதினால் வாசகர்கள் ரசிப்பாங்க.

2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?

இதழோடு இதழ் சேரும் நேரம் – சரண்யா ரொம்ப பிராக்டிகல் person. எந்த இடத்திலும் தேங்கி நிற்காத தன்னம்பிக்கை. எல்லாருக்கும் மிக முக்கியமான ஒன்னு அதுதானே!!!

3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?

Thriller – எது வேணும்னாலும் எழுதிடலாம். ஆனா த்ரில்லர் வகை கதைகள் என்னை பொறுத்தவரை சவாலான வகை. கடைசி வரை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்களை இருக்கை நுனியில் அமரவைத்து படிக்க வைக்கணும். சஸ்பென்ஸ் ரிவீல் ஆகக் கூடாது அதே நேரம் விறுவிறுப்பாக இருக்கனும்.

4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

தொடர்ந்து ரெண்டு நாள் எழுதாமல் இருந்தா கட்டாயம் ஒரு வித சோர்வு வந்துடும். இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு எழுதுவோம் என்ற சோம்பேறித்தனம் வந்துடும்.
அதனால் என்ன வேலையா இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு நாலு பக்கமாவது எழுதனும். எழுதிட்டு தான் தூங்க போகனும் என்ற ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கிறேன். கூடுமான வரை இதை follow பண்ணிடுவேன்.

5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

முதல்ல ஒரு கதை கருவை எடுத்துட்டா அவங்க அதில் முழு நம்பிக்கை வைக்கணும். முழு கதையும் அவங்களே உருவாக்கணும். வாசகர்கள் கருத்துக்களை வைத்து கதையின் போக்கை மாற்றி அமைக்க கூடாது. நம்ம எடுத்து இருக்கும் கரு தரமானது நம்ம கதையை கொண்டு போகும் விதம் சரி தான் என்ற நம்பிக்கை கட்டாயம் வேணும்.

6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?

நேரம்னு வெச்சுட்டு நான் எழுத உட்கார்ந்தது இல்லை. அப்படி plan பண்ணி நான் எழுத நினைச்சா பெரும்பான்மையான நேரங்கள் ஏதாவது வேலை வந்து சொதப்பிடும். பொதுவா வீட்டில் எல்லாலும் வேலைக்கு பள்ளிக்கு சென்ற பின் தனிமையில் இருக்கும் போது எழுதுவேன். இல்லைனா படுக்க போகும் முன் எழுதுவேன்.

7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?

இலக்கியங்கள் அதன் வகையிலேயே அழகு தான். அதை மாற்றி எழுத நம்ம யார்? ஆனா அப்படி நிகழாமல் இருந்து இருக்கலாம்னு மனசு அடிச்சுகிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலரின் மறைவு. ஆனா அது தான் கதையே அதனால் அப்படியே இருந்துட்டு போகட்டும்.

8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?

எழுத்தாளர்னு அவதாரம் எடுத்துட்டாலே எந்நேரமும் சிந்தனைகள் முழுவது எழுதிக் கொண்டிருக்கும் கதையில் தான் இருக்கும். பாதி தூக்கத்தில் கூட ஏதாவது தோணும் எழுந்து mobile la note பண்ணிட்டு தூங்குவேன்.

9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

ஒரு கதை எடுத்து எழுதுனா முதல்ல எழுத்தாளர் அந்த கருவில் நம்பிக்கை வைக்கணும். எதுக்காகவும் யாருக்காகவும் கதை கருவை மாத்த கூடாது. நான் வாசகர்கள் விமர்சனங்கள் and கருத்துக்களை வைத்து கதையை இதுவரை கொண்டு போனது இல்லை அப்படி செய்யவும் மாட்டேன்.

10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?

மந்திரம் சொன்னேன் வந்துவிடு – ஒரு உண்மையை கதையின் அடிப்படையில் எழுதியது. அதனால் அது பிடிக்கும்.

வேள்வியாய் ஒரு காதல் – toxic relationship la இருந்து வெளிய வந்து பெண்களுக்கு அடுத்தும் ஒரு வாழ்கை அழகா அமையும்னு சொல்ல நினைச்சு ஓரளவு வெற்றியும் கண்ட கதை.

11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?

இதழோடு இதழ் சேரும் நேரம் – ரொம்ப அழுத்தமான கதை. எழுதிட்டு எனக்கே ஒரு ரெண்டு மாசம் மன அழுத்தம் அதிகம் ஆகி கஷ்டப்பட்டேன்.

12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?

கருத்து சொல்லி புரட்சியா எழுதுவது தான் நல்ல தரமான படைப்புன்னு ஆகிடாது. குடும்பம் மற்றும் காதல் கதைகளில் அழகான வாழ்வியலை காட்டலாம். முகம் சுளிக்க வைக்காத வகையில், வாசகர்களை கட்டிப் போடும் எதுவுமே தரமான எழுத்து தான்.

நூற்றுக் கணக்கில் கதைகள் எழுதணும்னு நினைச்சு நான் எழுத வரலை. பத்தே கதைகள் எழுதி இருந்தாலும் அந்த பத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம்பிடிச்சு இருக்கனும் என்ற ஒரு உறுதியுடன் தான் எழுத்து பயணத்தை தொடங்கினேன்.

தொடர் கதைகள் எழுதும் போது இணையத்தில் சும்மா தானே படிக்கறாங்க நம்ம நினைத்த நேரத்துக்கு பதிவு கொடுக்கலாம் என்ற எண்ணம் என்னைக்கும் எனக்கு வந்துட கூடாது.

வாசகர்களை காக்க வைக்காமல் பதிவுகம் வாரம் இரண்டே பதிவு கொடுத்தாலும் சொன்ன நேரத்துக்கு கொடுக்கணும் என்ற முடிவில் தொடங்கிய எழுத்து. கூடுமானவரை என் வாசகர்களை ஏமாற்றியது இல்லை.

மனதில் இருந்ததை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

அன்புடன்
ஜனனி நவீன் 

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!