கோலங்கள்….
வாசலில் கோலம்
வரவேற்கும் கம்பளம்.
கோலமும் கலைதான்
கைவண்ணம் தான்.
புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை…
மார்கழியில் பூக்கும் வண்ணக்கோலங்கள்
நடுவில் வைக்கும் பூவரசன் பூவால் மேலும் அழகாகிறது..
சரியாய் இருந்தால் அழகுக் கோலம்
மாறிப்போனாலோ
அலங்கோலம்…
அரிசிமாவில் கோலமிடும் பெண்டிர்
ஆயிரம் அன்னதானம் சுகம் காண்பர்… குருவிகளும் எறும்புகளும் கூட்டாய் வாழ்த்தும் போது…!
S. முத்துக்குமார்