எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் முதுமையில் தள்ளாடி சுகவீனமாக இருக்கும் கோணமண்ட பெரியமாயனை ஒருவழியாக பெரியாஸ்பத்திரி அழைத்துச்சென்றால் தங்கம்மா. குழந்தை பேறற்ற இருவருக்கும், ஒருவருக்கொருவர் மட்டுமே துணை. கடைசியாக அந்த ஒரு துணையும் இப்போது இல்லை, பெரியமாயன் இறந்துவிட்டார். தங்கம்மாளின் ஒரே கனவு, அடிமை இந்தியாவில் பிறந்து ஐந்துவரை படித்து சில ஆங்கிலச் சொற்களை அப்போதே பேசி மரியாதோடு வாழ்ந்த தன் கணவனை நல்லடக்கம் செய்வது மட்டுமே. சுருக்குப்பையில் இருக்கும் காசு அம்பாசடர் கார் வாடகைக்கு எடுக்கப்போதுமானதாக இருந்தது. பெரியாஸ்பத்திரி வாசலில் இருந்து நள்ளிரவு ரெண்டு மணிக்குக் கார் கிளம்பியது, திக்கற்று நின்ற தங்கமா “கேசம்பட்டி போணும்” என்பதை தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை. சூழல் புரிந்த ஓட்டுநர் இரவில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டு பல பல மைல்கள் கடந்து கேசம்பட்டி தெருவில் வண்டியை நிறுத்தினார், பெரியமாயன் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ஏழை கிழவியின் வாழ்வை அர்த்தப்படுத்தி, மகிழ்வித்த உன் பெயர் “மகிழுந்துதானே!!” முற்றும். 10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்! மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
10_lineStory
எழுத்தாளர்: திவா இராஜேந்திரன் அதிகாலையில் எழுந்ததும் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வேப்பங்குச்சியை ஒடித்து பல்தேய்த்துக்கொண்டே அவரவரின் காதலி வீட்டின் வாசலில் வரைந்திருக்கும்…
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் ஐந்து வயதில் அப்பாவின் கைபிடித்து அந்த செவக்காட்டுக் கடலைத்தோட்டத்தில் கால்வைத்தால் கேசம்மாள். பருவம் வந்த மகளை கட்டிக்கொடுத்து, சீதனமாக அவள் உழைத்துத் தேய்ந்த அந்த செவக்காட்டை தந்தார் சடையன். பிள்ளைகளுக்கும் குறைவில்லை, கடலை விளைச்சலுக்கும் குறைவில்லை. ஆத்தா “ஏரோபிளேயான்” பறக்குது, மத்தியானமாச்சு கெளம்புறம் என கூலியாட்கள் கெளம்ப கேசம்மாவும் வீடு திரும்புவாள். ஐந்து வயதில் நிலத்தில் இறங்கியவளுக்கு அறுபது வயது, நித்தம் அவளின் கடிகாரம் அவள் தலைக்கு வெகு உயரத்தில் பறக்கும் “ஏரோபிளேயான்”. மகன்கள் டி.எஸ்.பி, என்ஜினீயர், அரசியல் பெரும்புள்ளி என வளர்ந்துவிட செல்வத்திற்குக் குறைவில்லை. இறப்பதற்குள் நாள்தோறும் தன் தோட்டத்தை கடக்கும் அந்த “ஏரோபிளேயானில்” பொறந்த மதுரையில் இருந்து மெட்ராஸ் வரை ஒரு முறை சென்றுவிடவேண்டும் என்பதே அவள் இலட்சியம். தாயின் நெடுநாள் கனவை நெனவாக்க விமானத்தில் அழைத்துச்சென்றார் முதல் மகன், விமானம் மதுரையில் இருந்து கிளம்பி வானின் உயரத்தை அடைந்தது. மெட்ராஸில் விமானம் கீழிறங்கும்போது, வாழ்நாள் ஆசை நிறைவேறிய கேசம்மாவின் மனம் வானில் மேல்நோக்கிப் பறந்தது. முற்றும். 10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்! மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
