உண்மையான வதனத்தைக்
காட்ட மறுத்து பல
ஃபேக்கான முகங்கள்
ஃபேஸ்புக் தளத்தில்
மாஸாக உலாவுவதால்
அறியா நட்பை
புரியாமல் சேர்த்து
தெரியாமல் அல்லல் படுவதை விட அமைதியாக உன்னிடம் இருந்து விலகி தூர நிற்க ஆசை
பயமுறுத்தும் முகநூல்
வேண்டாம்……..
நட்பான முகநூல் என்றால்
கட்டாயம் நட்பு பாராட்டி
மட்டில்லா மகிழ்ச்சி அடைவேன்!
உஷா முத்துராமன்