படம் பார்த்து கவி: கால மாற்றம்

by admin 1
47 views

பழைய கிழிந்த துணி கரி துணியாகியது
விறகு அடுப்பு இருந்த
முன்னோர்கள் காலத்தில்

சமையலறை துணி என்று சிறிய துண்டுகள் வாங்கப்பட்டது
வாயு ( கேஸ்) அடுப்பு இருக்கும்
பெற்றோர்கள் காலத்தில்

கை முழுவதும் உள் இருக்கும்படி உறைகள்
வந்துவிட்டது
மைக்ரோ ஓவன் இருக்கும்
நாம் அடுத்த தலைமுறையினர் காலத்தில்

அடும்பில்லா காலம் வரும்போது
கையுறை இல்லா காலம் வரும்

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!