💠எள் சட்னி
♦️தேவையான பொருட்கள்
🔻வெள்ளை எள் – கால் கப்,
🔻தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
🔻பூண்டு – ஒரு பல்,
🔻புளி – கோலி அளவு,
🔻காய்ந்த மிளகாய் – 6,
🔻கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
🔻கடுகு,உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
🔻எண்ணெய் – 2 டீஸ்பூன்,
🔻உப்பு – தேவைக்கேற்ப.
♦️செய்முறை
🔸முதலில் எள்ளை சுத்தம் செய்து வெறும் கடாயில் நன்கு வறுக்கவும்.
🔸சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
🔸மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.
🔸இப்போது சுவையான எள் சட்னி தயார்.
#பகிர்வு