✨வெஜ் குருமா
💠தேவையான பொருட்கள்:
🔸கேரட் – 1
🔸உருளை – 1
🔸பீன்ஸ் – 10
🔸காலிஃபிளவர் – சிறிது
🔸வெங்காயம் – 1
🔸தக்காளி – 1
🔸இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
🔸கறிமசால்பொடி – 2 தேக்கரண்டி
🔸மஞ்சள்பொடி – 1/4 தேக்கரண்டி
🔸கொத்தமல்லி, புதினா -1 கைப்பிடி அளவு
🔸உப்பு – தேவையான அளவு
💠அரைக்க:
🔹தேங்காய்துறுவல் – 1/4 கப்
🔹பொட்டுகடலை – 2 தேக்கரண்டி
🔹முந்திரி – 5
🔹சோம்பு – 1/4 தேக்கரண்டி
💠தாளிக்க:
🔻எண்ணை – 2 தேக்கரண்டி
🔻பிரியாணி இலை – 1
🔻பட்டை – 2
🔻கிராம்பு – 2
🔻ஏலம் -2
💠செய்முறை:
✴️காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
✴️அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
✴️கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கவும்.
✴️வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
✴️வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
✴️இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.
✴️தக்காளி வதங்கியவுடன் கறிமசால்பொடி,மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களை போடவும்.
✴️உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து வேகவிடவும்.
✴️குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கி பரிமாறவும்.