இன்னட்டை பிடிக்காத ஆள் இருக்கவே முடியாது. அனைவரும் விரும்பி உண்ணும் சாக்லெட் பற்றிய கற்பிதங்கள் அதிகம்.
குறிப்பாய், பாலுணர்வு தூண்டப்படும் என்ற கூற்று மிகவும் பரவலான ஒன்றாகும். இருப்பினும், இது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னும் அறியப்படாத உண்மையே.
பால் கலக்காத சாக்லெட்டை விட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்றோர் கற்பிதமும் உண்டு. இது உண்மையல்ல.
பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி வரும் என்பது மற்றுமொரு பிரபலமான கற்பிதமாகும்.
சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல் எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், இன்னட்டை மட்டுமே மைகிரேனுக்கு காரணம் சொல்லிட முடியாது.
சாக்லெட் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்ற நம்பிக்கையும் இங்கும் பலருக்குண்டு. வயிறு முட்ட தின்று விட்டு பின் இனிப்பிலான சாக்லெட்டையும் வாயுக்குள் அதக்கினாள் வரக்கூடாத சீக்கெல்லாம் தான் வரும்.

இருப்பினும், ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.
ஆகவே, சாக்லெட்டை அளவோடு உண்டு ஆரோக்கியமாக இருப்பது நமது கடமையாகும்.