சமையல் மல்லியின் சிறப்பு

by Nirmal
162 views
  • சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரகப் பாதை நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு மல்லி விதை உதவும்.
  • கொத்தமல்லி விதை வயிற்று வாயுவை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியது.
sample picture of Coriander
  • வாயுத் தொந்தரவு, உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றுக்கு மல்லி விதை சிறந்த மருந்தாகும்.
  • கழிச்சல் நோய்க்கு (Irritable Bowel Syndrome) ஓமமும் கொத்துமல்லியும் சேர்ந்த மருந்து குணம் தரும்.
  • வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கும் மல்லி விதையை உணவில் சேர்க்கலாம்.
  • மல்லி விதை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்திடும்.
  • நல்ல கொழுப்பைக் கூட்டிடும்.
  • கரப்பான், காளான்படை முதலான தோல் நோய்களுக்கு மல்லி விதை எண்ணெய் சிறந்த தீர்வாகும்.
sample picture of Coriander
  • தேநீர் தயாரிக்கும் போது மல்லி விதை, சுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தினால் வயோதிகத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கலாம்.
  • மல்லி விதைத் தேநீர் குடலின் தசை இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தணிக்கிறது.
  • சுக்கு, தனியா, பனைவெல்லம் சேர்ந்த கஷாயத்தை வாரம் ஒரு முறை குடிப்பது அஜீரணம் ஏற்படாதிருக்க உதவும்.
  • மல்லி விதையில் உள்ள 85 விதமான மண மூட்டும் எண்ணெய்களில் 26 வகை எண்ணெய்கள் மருத்துவக் குணமுள்ளவைகளாகும்.
  • லினாலூல் மற்றும் ஜெரானில் அசிடேட் ஆகிய மணமூட்டிகள்தான் மல்லி விதையின் மருத்துவத் தன்மைக்குக் காரணிகளாகும்.
  • இவையே உடல் செல்களைப் பாதுகாக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையைத் தருகின்றன.
sample picture of Coriander oil
  • அதனால் அடுத்த முறை சாம்பாரோ, ரசமோ, வற்றல் குழம்போ வைக்கும்போது மறக்காமல் மல்லி விதையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!