படம் பார்த்து கவி: அடிக்குணம்

by admin 1
51 views

கயப்புக் களஞ்சியமிவன்
கரடுமுரடு சட்டைக்காரன்
கசக்கிப் பிழிந்தினும்
கொண்ட குணம் மாறாதோன்
பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்
நோகாமல் நுழைந்திடுவான்
பசப்பற்ற கசப்பின்
அடிக்குணம் அறிந்த
அன்பர்களின் அகத்தினுள்ளே!

புனிதா பார்த்திபன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!