அளவெடுத்து அச்சடித்த
சந்தனப் பொட்டாய்
வட்ட வடிவில்
வாசம் நிறைந்து
வயிற்றை நிரப்பும்
வல்லவனே!
விதவித சுவையில்
வகைவகை வடிவில்
மிகைமிகை சத்தில்
பருப்பு பலவை இருந்தும்
ருசிக்கான போரில்
வாகை சூடி
பசிக்கான போரில்
அரியணை ஏறிடும்
அன்பிற்கினியோன் நீயன்றோ!
புனிதா பார்த்திபன்