அன்றொரு நாள்
நீயும் நானும்
எதிரும் புதிருமாக
உன் காந்தக் கண்களால்
களவாடிய என் இரவுகள்.
யாரும் இல்லா அந்த
பெட்டியில் தனிமை என்னை தீண்டவில்லை
பயம் என்னை ஆட்கொள்ளவில்லை.
ஆனால்,
உன்னிடம் ஏதோ ஒன்று,
என்னை எதுவும் செய்ய விடாது கொன்றது.
உறக்கம் என்னை தழுவ மறுத்தது,
உன்னிடம் ஒரு முறையேனும் பேசி விட
கொஞ்சம் எங்கியது
உன் கண் பார்த்து பேச முடியாமல்
நெஞ்சம் தவித்தது,
தன்னிலை மறந்து
முன்னிலையில் உன்
நினைவுகளை
அணு அணுவாய் ரசித்து
சேமித்து முடிப்பதற்குள்
நீ விடைபெற்று விட்டாய்,
சொல்லவும் முடியவில்லை,
கேட்கவும் முடியவில்லை,
ஆதலால்,
இன்று வரை பூட்டப்பட்ட ரயில் இன்ஜினாய்
யாருக்கும் அனுமதியின்றி
கிடக்கிறது என் உள்ளம்.
மீண்டும் என்றாவது
உன்னை பார்த்து விட
மாட்டேனா என்ற தேடுதலில்,
ரயில் தண்டவாளம் போல்
நீண்டு கொண்டே போகிறது என் நாட்கள் வீணே.
ஆயினும்
அந்த ஒற்றை நாள்
நினைவுகள் மட்டும்
போதும்
என் பிறவிப்பலன் காண 🥰
-மஞ்சு-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)