அலைபேசி என்றால் அல்லல்
என்று சொல்பவர்களின்
அனுபவம் கசப்பானதால்…
ரத்த உறவு மட்டுமல்ல
மத்த உறவுகளை
சுத்தமாக இணைக்கும்
மெத்தனமில்லா நண்பன்.
அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே
களவு போன மனம் போல அல்லல்பட்டு தவிக்கும்
அளவோடும் அவசியத்தோடும் பயன்படுத்துவோர்க்கு
உண்மை தோழனாகி
திண்மையுடன் வாழ உதவும் அலைபேசியே உன்னுள் வெளிநாட்டில் இருக்கும்
கனிவான மகள் பேரன் பிள்ளைகளைப் பார்த்து பரவசம் அடைவதால் யாருக்கு எப்படியோ எனக்கு நீ அமைதி தருபவன்
உஷா முத்துராமன்
