இயற்கையிலே பெண் அழகு
அழகுக்கு அழகு செய்ய
புன்னகை பூக்கும் முகத்தில்
பொன் நகைகள் ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள்
பொற் கரங்களிலே பொன் வளையல் பொன் கடிகாரம் பிரேஸ்லெட் தேவைதானா
தேவையில்லை என்றால்
கோபம் கொள்வாளே அவள்
பெண் பாவம் மட்டுமல்ல
கோபமும் பொல்லாதது
க.ரவீந்திரன்.