காலத்தின் சீற்றம்
மிக்க ஆட்டம் காணீர்!
மாதர் குலத்தின்
தேவைக்கும்…ஆடம்பரத்திற்கும்…
இடையே புகுந்த வெளியை
நிரப்ப முடியா…
வாழ்வதற்குப் பொருள் தேடும்
வியாபாரச்சந்தையில் சிக்கி
வாழ்வதன் பொருள் தொலைத்த
முதிர் கண்ணன்களின்
புதிய அவதாரம்….
நம் இளம்பெண்டிர்குலத்தைப்
பிடித்த மாயப்பேய்
தொலைவது எப்பொழுதோ?
நாபா.மீரா