அவள் வலிகளை உணர்ந்தவன்
ஒருபோதும்
அவள் குறைகளை
எள்ளி நகையாடுவதில்லை
மூச்சிருக்கும் வரை
அவளுக்கு உறுதுணையாய்
இருக்க வேண்டுமடா
மூணு நாள் தீட்டு
எவன் கொண்டு வந்ததடா?
அவள் இல்லையேல்
அகிலம் இல்லை
எதன் வழி வந்தாயோ
அதன் வலி புரியாமல்
தீட்டு பார்ப்பவன்
இழியவன் தான்!
அவள் குப்பை தொட்டியில்
வீசியெறிந்த
இரத்தம் நிறைந்த
நாப்கின் பேட்களில்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவள் சொல்லாத
இரணங்களும்-வலிகளும்!
-லி.நௌஷாத் கான்-